நாடெங்கும் ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தியா கூட்டணி உருவான பின்பு நடைபெற்ற தேர்தல் என்பதால் இந்த முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த வருட இறுதியிலேயே 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த வருடம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையிலேயே இந்த இடைத்தேர்தல்கள் தற்போதுள்ள  அரசியல் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ? மிகவும் முக்கியமான முடிவாக மேற்குவங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வசம் இருந்த ஒவ்வொரு இடத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

திரிபுரா மாநிலத்தில் இரண்டு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஓர் இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி வேறு கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.இதனால் இந்தியா கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே  கடுமையான போட்டியில் நாடு முழுவதும் நிலவ வாய்ப்பிருக்கிறது என்பதை காட்டும் வகையில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் இருக்கின்றன.

சுலபமாக பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட முடியாது.  அதேபோலவே இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்து முக்கியமான அம்சங்களை வலியுறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்தால் அவர்களுக்கும் வெற்றி பெற  வாய்ப்பு இருக்கும் என்பதை காட்டும் வகையிலே இந்த முடிவுகள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஆகவே இந்த இடைத்தேர்தல் முடிவுகளின் தாக்கம் இனிவரும் நாட்களில் ”இந்தியா” கூட்டணியில் பேச்சுவார்த்தையில் தெரியவரும் என்பது அனைவருடைய கருத்தாக இருக்கிறது.