கேரள மாநிலம் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 7 மற்றும் 11 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் தனது இளைய மகளுடன் இந்த பெண் பிரிந்து சென்று காதலன் சிசுபாலன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். அப்போது சிசுபாலன் இந்த பெண்ணின் ஏழு வயது மகளிடம் பலமுறை தவறாக நடந்துள்ளார்.

இது பற்றி சிறுமி தனது தாயிடம் கூறிய போது அவர் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணின் 11 வயது மகள் தனது தங்கையை பார்க்க வீட்டிற்கு வந்தபோது சிறுமி தனது அக்காவிடம் அனைத்தையும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பாட்டியிடம் விஷயத்தைக் கூற அவர் பள்ளிக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை எடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசுபாலன் மற்றும் பிள்ளைகளின் தாய் என இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த போது சிசுபாலன் தற்கொலை செய்து உயிரிழந்தார். இந்நிலையில் வழக்கு இறுதி கட்ட விசாரணை முடிவடைந்து சிசுபாலனுக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.