இந்தியாவின் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் மிக குறைவாக இருப்பதால் கோடிக்கணக்கான பயணிகள் தினம் தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பயணம் செய்யும் முறையை ரயில்வே நிர்வாகம் எளிமையாக்கி உள்ளது. அதன்படி ரயில் டிக்கெட்டுகளை க்யூ ஆர் குறியீடு மூலம் புக் செய்து கொள்ளும்படி புதிய வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வசதி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் க்யூ ஆர் குறியீட்டு சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதனை ஸ்கேன் செய்து யூபிஐ கட்டணம் மூலம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்திய ரயில்வேயின் UTS செயலியின் மூலமாகவும் க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து தேவையான ரயில் இருக்கைகளை முன் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.