இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில் குடியேறுவது பல இளைஞர்களின் கனவு. ஆனால், அந்த நகரத்தின் நிஜமான வாழ்க்கைச் செலவுகள் பலரை அதிர வைக்கின்றன. சமீபத்தில் எக்ஸ் (X) தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ள தனது முதல் வாரச் செலவுப் பட்டியல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த நபர் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்த வெறும் ஏழே நாட்களில் வாடகைக்காக ₹18,000-க்கு மேலேயும், உணவிற்காக ₹12,000-க்கு மேலேயும் செலவு செய்ததாகத் தெரிவித்துள்ளார். “நகர வாழ்க்கை மலிவானது இல்லை, எனது செலவுப் பழக்கங்களும் சரியில்லை” என அவர் வெளிப்படையாகப் புலம்பியுள்ளார்.
இந்திரா நகர், எலக்ட்ரானிக் சிட்டி போன்ற இடங்களை ஆராய்ந்துவிட்டு இறுதியில் HSR லே-அவுட்டில் அவர் தங்கியுள்ளார். அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய பிளாட் கிடைத்தாலும், ஒரு வாரத்திலேயே ₹30,000 செலவானது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே 7 கோடி சொத்து வைத்திருப்பவர்களே இங்கு வீடு வாங்குவது வீண் என்று கூறிவரும் நிலையில், இந்த இளைஞரின் பதிவு பெங்களூரு வாசிகள் மற்றும் அங்கு செல்லத் திட்டமிடுபவர்களிடையே ஒரு ‘காஸ்ட்லி’ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
