நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதனால் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் வங்கிகள் செயல்படுமா என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது. வங்கி விதிமுறை என்பது இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகள் மூடப்படும். இந்த மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை குறித்த விவரம் இதோ.

ஏப்ரல் 9- மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மணிப்பூர், கோவா, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் இயங்காது.
ஏப்ரல் 10- கேரளாவில் வங்கிகள் இயங்காது.
ஏப்ரல் 11- சண்டிகர், சிக்கிம், கேரளா மற்றும் இமாச்சல பிரதேசம் தவிர பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் இயங்காது.
ஏப்ரல் 13- திரிபுரா, அசாம், மணிப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் இயங்காது.
ஏப்ரல் 15- அசாம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வங்கிகள் இயங்காது.
ஏப்ரல் 16- குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சண்டிகர், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள்இயங்காது.