இந்தியாவில் குடிமக்கள் அனைவரும் ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களுக்கும் KYC சரி பார்ப்பை முடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களும் தங்கள் KYC அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் KYC அப்டேட் செய்யப்படாத வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யப்பட மாட்டாது என தகவல் பரவி வருகின்றது. இதுகுறித்து விளக்கம் அளிக்கையில், கேஸ் சிலிண்டர் விநியோகம் ரத்து செய்யப்படாது.

சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத் தொகை ரத்து செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே KYC சரிபார்ப்பை கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் மேற்கொள்வது நல்லது. அதற்கு வாடிக்கையாளரின் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி பாஸ்புக் மற்றும் கேஸ் சிலிண்டர் புக்கிங் எண் ஆகிய ஆவணங்களின் நகலை சிலிண்டர் நிறுவனத்தின் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.