இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் உலகில் எங்கு அசம்பாவித சம்பவங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் நடைபெற்றாலும் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டு விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. அதாவது கால் டாக்ஸிக்கு இளம்பெண் ஒருவர் புக் செய்துள்ளார். அந்த டாக்ஸி 7 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளது.

இதனால் கோபம் அடைந்த அந்த இளம் பெண் டாக்சிக்குள் உட்கார்ந்து ஓட்டுனரிடம் கடுமையாக தகராறு செய்கிறார். அதோடு அவர் முகத்தில் காரி எச்சிலால் துப்பிவிட்டார். இருப்பினும் பொறுமையை இழக்காதே அந்த ஓட்டுனர் அந்த பெண்ணிடம் தொடர்ந்து பேச அவரோ அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார். இதன் காரணமாக அந்த ஓட்டுனர் அந்த பெண்ணுக்கு தெரியாமல் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.