ஆசியாவின் சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஜான் (69). இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார். அதன்பிறகு நடிகர் ஜாக்கி ஜான் தற்போது ரைடு ஆன் என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இது நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரைப்படம். இந்த படம் ஏப்ரல் 7-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் 68 வயதிலும் ஆக்சன் காட்சிகளில் அசத்தும் ஜாக்கிசானின் ரைடு ஆன் படத்தின் டிரைலர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.