
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்து கொண்டு ஒரு 65 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த மூதாட்டியின் வீட்டின் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அதிகாலை மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் வந்தனர்.
அவர்கள் திடீரென அந்த மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் 2 பேரை பிடித்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் மீதமுள்ள ஒருவரையும் போலீசார் தேடிப் பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.