
தெலுங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினரை சேர்ந்தவர் யஷ்வந்த். இவர் பகுதியில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த 7 பேருடன் சேர்ந்து கடந்த 19ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கோரிசென் மலைக்கு சென்றார். அந்த மலையின் உயரம் 6448 மீட்டர் ஆகும். இந்த மலை உச்சிக்கு அவர்கள் ஏறி சென்றனர். ஆனால் யஷ்வந்துடன் வந்தவர்கள் மலை மேலே ஏற முடியாமல் பாதியில் சென்றனர்.
இருப்பினும் மலையின் உச்சிக்கு சென்ற யஷ்வந்த், அங்கிருந்த உச்சியில் தேசிய கொடியை நாட்டினார். ஏற்கனவே 2016ம் ஆண்டு ராணுவ வீரர்கள் மட்டுமே சென்ற அந்த மலைக்கு, தற்போது கல்லூரி மாணவர் ஒருவர் சென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். அதோடு மலை உச்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது, பெண்களை மதிக்க வேண்டும், வன்முறையை நிராகரிப்போம் என்று விழிப்புணர்வு பதாகைகளை காட்டினார். மேலும் தற்போது 8849 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.