துணிவு திரைப்படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கதையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அவர் அப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார். இப்போது அஜித்தின் 62வது படத்தை இயக்குவதற்கு மகிழ்திருமேனி கமிட்டாகி உள்ளார். இதற்கிடையில் மகிழ்திருமேனிக்கு அஜித் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார்.

அதாவது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது 2023 ஆம் வருடம் அக்டோபர் 19ம் தேதி ஆயுத பூஜைக்கு அப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்து விட்டார்கள். அதேப்போல் தன் 62 வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் போதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டே படத்தை ஆரம்பிக்க வேண்டும் என அஜித் கூறியுள்ளார்.

மேலும் 4 மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட வேண்டும். இடையில் எவ்வித பிரேக்கும் கொடுக்கக்கூடாது எனவும் கண்டிஷன் போட்டுள்ளாராம். இந்நிலையில் அஜித் 62வது திரைப்படத்தின் சூட்டிங்கை மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.