இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் ரயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டில் 207 கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 604 பேரை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதேபோன்று பல்வேறு காரணங்களால் குடும்பத்தை பிரிந்த 17,000 மேற்பட்ட குழந்தைகளையும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு குடும்பத்துடன் இணைத்துள்ளனர்.

அதன் பிறகு ரயில் தண்டவாளத்தில் விபத்திலிருந்து 873 ஆண்கள் மற்றும் 543 பெண்களை காப்பாற்றியுள்ளனர். 32,337 பயணிகளுக்கு சொந்தமான 500 கோடி மதிப்பிலான உடைமைகள் மீட்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது 220 பெண்களுக்கு மகப்பேறு நிகழ்ந்துள்ள நிலையில் அவர்களுக்கு 150 பெண்கள் உதவி செய்துள்ளனர்.

864 ரயில் நிலையங்களில் 6646 ரயில் பெட்டிகளில் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ரயிலில் கடத்த முயன்ற 81 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ரயிலில் கடத்தப்பட்ட வனவிலங்குகளும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 2022-23 ஆம் நிதி ஆண்டில் ரயில்வே பாதுகாப்பு படையினர் 108 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அதோடு கடத்தல் குற்றவாளிகள் 68 பேரையும் கைது செய்துள்ளனர்.