ரயிலில் பயணம் மேற்கொள்வதற்கு சில விதிகள் இருக்கிறது. தற்போது ரயில்வேயின் ஒரு முக்கிய விதியை பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். இந்த விதியின் கீழ் ரயில்வேயில் சில பொருட்களை எடுத்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இப்பொருட்களுடன் யாராவது சென்றால் ரயில்வே சார்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

ரயிலில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் வெடிப் பொருட்களை கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் இப்பொருட்களுடன் பயணிக்க இயலாது. அதேநேரம் கேஸ் சிலிண்டர்கள், அடுப்புகள், விளக்குகள், பட்டாசுகள், மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் லைட்டர்களும் அடங்கும். யாரேனும் இப்பொருட்களை வைத்து இருந்தால் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ரயிலில் இப்பொருட்களைக் கொண்டு பயணம் செய்வது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும். ரயில்வே சட்டம் 1989-ன் கீழ் 67, 154,164 மற்றும் 165 ஆகிய பிரிவுகளின் கீழ் ரயிலில் எரியக்கூடிய பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஆகவே ரயிலில் யாரேனும் இந்த பொருட்களை வைத்து இருந்தால் அவருக்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனை (அ) 1 ஆயிரம் ரூபாய் வரையிலும் அபராதம் (அ) இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.