தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் பள்ளி கல்வித்துறை பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக கற்றல் திறனை ஊக்குவிக்கும் விதமாக தேர்வுகளை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் கேள்விகளை தயார் செய்யும் முறை குறித்து ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கேள்விகள் அனைத்தும் அரசின் எமிஸ் இணையதளத்தில் பதிவிட வேண்டும்.மாணவர்களுக்கு அருகில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் ஹைடெக் ஆய்வகத்தில் வைத்து ஆன்லைன் முறையில் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி சுற்றுலா வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் தயாரித்தல் உள்ளிட்ட பல பயிற்சிகள் தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.