சென்னையில் உள்ள துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்டு நிலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமாருக்கும் அவருடைய சகோதரர் மகேஷுக்கும் இடையே பல வருடங்களாக பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தன்னை அடியாட்களை கொண்டு மிரட்டுவதாகவும் கொலை மிரட்டல் வருவதாகவும் கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவருடைய மகள் ஜெயப்பிரியா மற்றும் நவீன் குமார் ஆகியோர் மீது மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்புவதாக கூறி மகேஷ் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.

அதன் பிறகு மகேஷ் தன் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் மனு தாக்கல் செய்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்ய வேண்டும் என மகேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது 6 வருடங்களுக்குப் பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது வழக்கு தொடரப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டதோடு வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் கூறப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மகேஷ் தரப்பில் தன்னுடைய வாதங்களை முன்வைக்க கால அவகாசம் வேண்டும் என்ற நீதிமன்றம் கேட்கப்பட்டது. மேலும் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி மாதம் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.