பீகாரைச் சேர்ந்த உபேந்திர குமார் (வயது 41) சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு சலூன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவர் ஒரு, 6 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர்மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் உபேந்திர குமாரை பிடித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
