புதுக்கோட்டை மாவட்டம் தென்னஞ்சரையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் – ஜெயந்தி தம்பதி பசு வளர்த்து வருகிறார்கள். இவர்களுடைய பசுவானது கன்று குட்டி ஈன்றது. அந்த கன்றுக்குட்டியானது வழக்கத்தை விட ரெண்டு கால்கள் அதிகமாக மொத்தம் ஆறு கால்கள் இருந்துள்ளது. இதை பார்த்த அந்த பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு  பார்த்து சென்றனர்.

இது குறித்து கால்நடைத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து கால்நடை உதவி மருத்துவர் வந்து பார்வையிட்டு பிறகு கன்று குட்டி ஆய்வு செய்ததில் அதனுடைய இந்த இயற்கைக்கு மாறான ரெண்டு அல்லது மூன்று கால்களுடன் பிறப்பது பாலிமெலியா என்று கூறப்படுகிறது. மரபணு கோளாறு அல்லது பிழை எனப்படும் குரோமோசோம் பிரிதலில் ஏற்படும் மாற்றத்தினாலும், வைட்டமின் மாற்றத்தினாலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.