கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் ஓய்வு பெற்ற மத்திய காவல் படை வீரரான விஷ்வம்பரன் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் 20 லாட்டரி சீட்டுகள் வாங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகள் வாங்கி இதுவரை 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே பரிசு தொகை வென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு லாட்டரியில் வெற்றி பெற்றதை அறிந்த இவர் ஆலப்புழாவில் உள்ள தனது லாட்டரி சீட்டுகளை சரிபார்க்க சென்றுள்ளார். அதில் இவருக்கு முதல் பரிசு 12 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இவர் வாங்கிய இரண்டு பம்பர் லாட்டரி சீட்டுகளில் ஒரு சீட்டுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. மேலும் நான் ஒரு வீடு வாங்க விரும்புகிறேன் எனவும் அந்த பணத்தை நான் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யவில்லை, என்னுடைய குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.