செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மாங்குடி, சன்னாநல்லூர், நன்னிலம், குடவாசல் போன்ற பகுதிகளிலும் திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகையிலும் மழை பெய்து வருவதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.