எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  அந்தவகையில்   தொடர் வைப்புத்தொகை (Recurring Deposit) வசதியை எஸ்பிஐ வழங்குகிறது.

இத்திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 6.8%, மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தில் 100 இருந்து முதலீடு செய்யலாம். நீங்கள் 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு ஆர்டி செய்யலாம். 55,000 வட்டி விரும்பினால், ஒவ்வொரு மாதமும் 5,000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும்