
தமிழகத்தில் அரசு துறையில் 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சியில் இருந்து விளக்கு அளிக்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிகளின் ஓய்வு பெறும் வயது 58 யில் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக அரசின் பயிற்சித்துறை தலைவர் சார்பாக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த கடிதத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு அலுவலர்கள் உடல்நல குறைவு காரணமாக விரைவில் உடல் சோர்வு அடைவதால் அவர்களின் உடல் நிலையை கருதி தற்போது உள்ள நடைமுறை தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பயிற்சி துறை தலைவரின் பரிந்துரையை ஏற்று நேரடி நியமனம், பதவி உயர்வு மற்றும் பல்வேறு வகைகளில் நியமனம் பெற்ற 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள் பவானிசாகரில் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கும் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது