கடந்த 2016 ஆம் வருடம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் 2000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது இந்த நிலையில் மீண்டும் ரூபாய் நோட்டு குறித்து நிதி அமைச்சகம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு மத்திய அரசு 500 ரூபாய் நோட்டையும் நிறுத்துமா என்று நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது தற்போது சந்தையில் 500 ரூபாய் நோட்டு மதிப்பு தான் பெரியது என்பதால் விரைவில் 500 ரூபாய் நோட்டுகளையும் அரசு தடை செய்யும் என்ற அச்சம் மக்களிடையே இருந்தது.

தற்போது அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து திரும்பி பெற்ற அரசாங்கம் அதன் பிறகு மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டை கொண்டு வருமா என்று கேள்வியும் எழுந்தது. இது குறித்தும் அத்தகைய திட்டம் தற்போதைக்கு எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.