பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா 2023 நிதியை பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானின் சிகார் நகரில் வெளியிட்டார். 14வது தவணையின் கீழ். நாட்டில் உள்ள சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 வரவு வைக்கப்படும். இதற்காக சுமார் 317,000 கோடி விவசாயிகளின் கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டுள்ளது. பி.எம்.கிசானின் கீழ், ஒவ்வொரு விவசாயிக்கும் 2,000 வீதம் 3 தவணைகளில் ஆண்டுக்கு 6,000 டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஒருசில விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதில்லை என்று புகார் எழுந்து வருகிறது. இதற்கு அவர்கள் வழங்கிய விவரங்கள் ஏதேனும் தவறாக இருந்தாலும் பணம் வராது. எனவே அவற்றை உடனே சரிபார்ப்பது நல்லது. அந்தவகையில் விவசாயியின் பெயர், வயது, பிரிவு ஆதார் எண் இணைப்பு ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.

ஆதார் கார்டு இல்லாவிட்டால் டிரைவிங் லைசென்ஸ், ஓட்டர் ஐடி, நூறு நாள் வேலைத்திட்ட அட்டை ஆகியவை ஏற்கப்படும். வங்கியின் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி கோட் ஆகியவை முக்கியமானதாகும். எனவே அதையும் சரி பார்க்க வேண்டும். செல்போன் நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும். ஒருவேளை முதலில் கொடுத்த செல்போன் நம்பரை மாற்றி இருந்தால் அதை தற்போது அப்டேட் செய்ய வேண்டும். அப்போதுதான் பணம் தொடர்பான விவரங்கள் பயனாளிகளுக்கு சரியாக வந்து சேரும்.