ஜூலை மாதம் முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பல விதிகள் மாற்றப்பட உள்ளன. அது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

காசோலை தொடர்பான விதி:

பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் வங்கியின் காசோலை தொடர்பான முக்கிய விதி மாறப்போகிறது.அதாவது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான காசோலைகளை செலுத்துவதற்கு வங்கியால் நேர்மறை ஊதிய முறை அவசியமாக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறைகள்:

ஆகஸ்ட் மாதத்தில் பல பண்டிகை நாட்கள் வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் மொத்தம் 18 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் எனவும் இதில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி சிலிண்டர் விலை:

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வருகின்ற ஆகஸ்ட் மாதமும் சிலிண்டர் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஐடிஆர் நிரப்பினால் அபராதம்:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் கடைசி தேதிக்கான காலக்கெடு தனிப்பட்ட வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளை தணிக்கை செய்ய தேவையில்லை. இந்த தேதிக்குள் ஐடி ஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். இப்படியான நிலையில் வரியுடன் அபராதமும் செலுத்த வேண்டும் எனவும் உங்களின் வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.