பஞ்சாபில், இரண்டு சகோதரர்கள் தங்களின் ஒரே சகோதரிக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு புதிய வீட்டைப் பரிசாக அளித்து அசத்தியுள்ளனர். தந்தை இல்லாத நிலையில், தனது சகோதரியை ராணி போலப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அந்தச் சகோதரர்கள், 175 கஜ பரப்பளவில் இந்த வீட்டை வாங்கியுள்ளனர். அந்த வீட்டிற்குச் சகோதரியை அழைத்துச் சென்று, இது உன்னுடைய வீடுதான் என்று சொன்னபோது, அவர் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினார்.

மேள தாளங்கள் முழங்க, உறவினர்கள் புடைசூழ நடந்த இந்தச் சர்ப்ரைஸ் நிகழ்வு பார்ப்பவர் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தக் காணொளியில், தனது சகோதரர்களின் அன்பைப் பார்த்து அந்தச் சகோதரி அவர்களைக் கட்டித் தழுவி அழுவது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இன்றைய காலத்தில் உறவுகளுக்கு இடையே விரிசல்கள் அதிகரித்து வரும் வேளையில், உடன்பிறந்த பாசத்திற்கு உதாரணமாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

<a href="http://

“>

மில்லியன் கணக்கானோரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோவிற்கு, “ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஒரு சகோதரர்கள் கிடைக்க வேண்டும்” என இணையவாசிகள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். சகோதரர்கள் தங்கள் கடின உழைப்பால் சேர்த்த பணத்தில் சகோதரியின் கனவை நனவாக்கியது ஒரு உன்னதமான செயலாகப் போற்றப்படுகிறது.