இந்தியாவின் ஏராளமான ஷாப்பிங் மால்கள், பிக் பஜார் போன்ற கடைகள் இருக்கின்றன .இதில் சமீபத்தில் மக்களிடையே மிகவும் பிரபலமானது லூலு குரூப். இந்த லுலு குரூப் இந்தியாவின் சிறு சிறு நகரங்களிலும் கால் தடம் பதித்து விட்டது. சமீபத்தில் தான் கோயம்புத்தூரில் இந்த மால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொழில் விரிவாக்கத்தின் முயற்சியாகவும், வாடிக்கையாளர்களை அதிகமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் கேரள மாநிலத்தில் உள்ள லுலு மாலில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூலை 9ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை  பயன்படுத்தி எலக்ட்ரானிக் பொருட்களை ஐம்பது சதவீதம் வரையில் தள்ளுபடியில் வாங்கிக் கொள்ளலாம். இது போன்ற எக்கச்சக்க சலுகைகள் லுலு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் இந்த சலுகை கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.