இன்று நாடு முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எனது 50 ஆண்டுகால திரையுலக பயணத்தை ஒட்டி என்னை மனமாற வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன் பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும், கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.