
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தா இலவசம் பெற வேண்டிய நிலையில் இல்லாத அளவுக்கு என் மக்கள் வறுமையின்மை நிலை இல்லாமல், வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன். நான் கொடுக்க நினைக்கிறது தரமான கல்வி, சமமான கல்வி. தரமான மருத்துவம், சமமான மருத்துவம்.
ஏழை – பணக்காரன் பாகுபாடு இல்லாமல் அறிவை வளர்க்கும் கல்வி, உயிரை காக்கும் மருத்துவமும் என் மக்களுக்கு சரியாக கொடுத்திட்டாலே அவனுக்கு பாதி காசு மிச்சம், செலவு இல்லை. ஆனால் இலவசமாக தான் இருக்குன்னு நீங்க கேட்கக்கூடாது…. இருக்கு தரமா இருக்கா ? முதலமைச்சருக்கு முடியலன்னா அரசு மருத்துவமனையில் படுப்பாரா ? படுத்து இருக்காரா ?
அய்யா எம்ஜிஆர்-க்கு முடியல படுத்தாரா ? அய்யா கருணாநிதிக்கு முடியல, அம்மையார் ஜெயலலிதா முடியல ஏன் அப்பல்லோ போனீங்க ? நீங்க நடத்துற அரசு மருத்துவமனையில்…. அதற்கு ஒதுக்குற ஆண்டு நிதிநிலை என்ன ? எவ்வளவு நிதி ஒதுக்குறீங்க ? அதுக்கு பதில் சொல்லுங்க. இப்போ அரசு பள்ளியில் அரசு பள்ளியில் வேலை பார்க்கிற ஆசிரிய பெருமக்கள் பிள்ளையாவது படிக்கிறதா ? பேராசிரியர் பெருந்தகை பிள்ளைகள் கல்லூரியில் படிக்குதா ?
அமைச்சர் மகன் யாராவது அரசு பள்ளி – கல்லூரியில் படிக்கிறானா ? எல்லாமே தனியார் முதலாளி தான் தரமா கொடுப்பான் அப்படின்னா… அரசு எதுக்கு ? எல்லாம் ஒப்பந்தம் கொடுத்து, டெண்டர் கொடுத்துட்டு விட வேண்டியதானே… அதானிக்கு ஒரு அஞ்சு வருஷம், அம்பானிக்கு ஒரு அஞ்சு வருஷம். இங்க இருக்குற முதலாளிக்கு கொடுத்துட்டு போக வேண்டியதுதானே என ஆவேசமானார்.