விண்வெளியில் சுற்றி வரும் எரிகற்களில் சில கற்கள் அவ்வபோது பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே வருகிறது. இதுபோன்ற ஒரு எரிக்கல் பூமியின் மீது மோதியதால் டைனோசர்களின் இனம் முற்றிலும் அழிந்து போனது. தற்காலத்தில் பூமியில் விழுந்த சிறிய அளவிலான எரிகற்களால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் அதனுடைய அச்சம் என்றும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் நாசா நேற்று முன்தினம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பூமியை நோக்கி 5 எரிகற்கள் வந்து கொண்டு இருப்பதாகவும், அதில் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளனர். அந்த ஒரு எரிக்கல் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு இணையாக 500 அடி உயரம் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.