ஹரியானாவில் தேசிய கல்விக்கொள்கை 2020-ன் படி 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே 1-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 5 வயது 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் சேர முடியாமல் இருந்தனர்.

இதனால் பெற்றோர்கள் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் (2023-2024) செப்டம்பர் மாதத்தில் 5 வயது மற்றும் 6 மாதங்கள் நிறைவடையும் குழந்தைகள் 1-ஆம் வகுப்பில் சேர அனுமதிக்கலாம் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் மார்ச் 31-ஆம் தேதிக்குள் 5 வயது 2 மாதங்கள் ஆன குழந்தை 1-ம் வகுப்பில் சேரலாம். இவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் 5 வயது 8 மாதங்கள் நிறைவடையும் என்பதால் பள்ளிகளில் சேர்க்க அனுமதிக்கலாம் என்று தொடக்கக்கல்வி இயக்ககத்தின் அதிகாரி தெரிவித்து உள்ளார்.