
ரஷ்ய நாட்டில் உள்ள ஒரு பகுதியில் ஒரு நாய் குழந்தையை தாக்க முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த ஒரு நாய் 5 வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்க முயற்சி செய்கிறது. உடனே அந்த குழந்தையின் தாய் தன் மகன் மீது படுத்துக்கொண்டு குழந்தையை காத்தார். அந்த நாய் தாக்கியதில் குழந்தையின் தாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும் தன் குழந்தையை காப்பதற்காக தன் உடம்பை அறணாக மாற்றி அந்த தாய் அங்கிருந்து நகராமல் இருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த நாயின் உரிமையாளர் முதலில் அந்த நாய் தன்னுடையது இல்லை என்று கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அவருடைய நாய்தான் என்பது தெரியவந்த நிலையில் பின்னர் ஒப்புக்கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இது போன்ற சம்பவங்களுக்கு அந்த நாயின் உரிமையாளர்கள் தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.