அமெரிக்காவை சேர்ந்த இசை கலைஞரான ஸெடி (22) என்பவர் ஐந்து பெண்களை ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளார். வெவ்வேறு வயது கொண்ட அந்த ஐந்து பேருக்கும் ஒரே நேரத்தில் வளைகாப்பையும் நடத்தி முடித்துள்ளார். இந்தச் செய்தியை ஸெடியால் கர்ப்பமான ஆஷ்லே (29) என்ற பெண் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து உள்ளார்.

தாங்கள் ஒரே குடும்பமாக குழந்தைகளை வரவேற்க தயாராக உள்ளதாகவும் ஒற்றுமையாக இருந்தால்தான் தங்கள் குழந்தைகளுக்கு நல்லது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் பதிவை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்து பகிர்ந்து உள்ளனர். மேலும் ஐந்து பெண்களை கர்ப்பம் ஆக்கிய அவர் கூறுகையில், ஐந்து பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்த போதிலும் அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.