மத்திய பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் 5 வயது சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அவரது வளர்ப்பு தாயால் சூடான கரண்டியால் தண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன் கிழமை தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இந்நிலையில் சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்ததை அறிந்த, வளர்ப்பு தாய் ராசியா பானோ, காலை 6 மணியளவில், சிறுவனை தாக்கி, சூடான கரண்டியால் அவரது இடுப்புகள், கைகள், அந்தரங்க பகுதிகள் மற்றும் தொடையில் சூடு வைத்துள்ளார்.
வலியில் அலறிய சிறுவனின் சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை மற்றும் பாட்டி உடனடியாக தலையிட்டு, சிறுவனை மீட்டுள்ளனர். மேலும் பாதிக்கபட்ட சிறுவனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து சிறுவனின் பாட்டி உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் ; புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவனிடம் விசாரணை செய்து பல இடங்களில் தீக்காயம் அடைந்ததை உறுதிப்படுத்தி, ராசியா பானோவுக்கு எதிராக FIR பதிவு செய்துள்ளனர். ராசியா பானோவுக்கு பல சட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.