தமிழகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி மற்றும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் பார்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் அந்த இரண்டு நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 அதாவது நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.