லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்ப்டத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் நடித்துள்ளனர். இத்திரைப்படம்கடந்த 19 ஆம் தேதி பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி இந்த  திரைப்படம் கலெக்ஷனை அள்ளி வருகிறது.

இப்படத்திற்கு சென்னை பில்ராத் மருத்துவமனை, மருத்துவமனை ஊழியர்கள் 4,500 பேருக்கு இலவச டிக்கெட் வழங்கியுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், புற்று நோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆகியோருக்கு இந்த டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது