
தமிழ் திரையுலகில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருபவர் தான் நடிகை லாவண்யா. இவருக்கு தற்போது 44 வயதாகும் நிலையில், பிரசன்னா என்ற நபரை திருமணம் செய்திருக்கிறார். இதில் லாவண்யா சூரிய வம்சம் படத்தில் ஒரு சிறு காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து விஜய் நடித்த பத்ரி, கமல்ஹாசன் நடித்த தெனாலி, ரஜினிகாந்த் நடித்த படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். அதோடு சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் லாவண்யா பிரசன்னா என்பவரை திருப்பதியில் வைத்து திருமணம் செய்திருக்கிறார். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.