அமெரிக்காவில் கல்வி கடன் பெற்ற பலரும் அதனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனால் கல்விக்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இதனிடையே அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும் தனது தேர்தல் வாக்குறுதியில் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய மதிப்பில் 41 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக் கடனை ரத்து செய்து ஜோ பைடன் அறிவித்துள்ளார். கல்வி கடன் பெற்றவர்களில் அதிகமானவர்கள் செவிலியர்களாகவும் ஆசிரியர்களாகவும் அரசு ஊழியர்களாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.