இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது புதுவிதமான மோசடி அரங்கேறுகிறது.

செல்போன் அழைப்பு தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைத்தொடர்பு துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் செல்போன் நிறுவனத்தில் இருந்து வருவது போல அழைப்பு வந்து *401#என்ற எண்ணை டயல் செய்ய சொன்னால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாறாக அதற்கு பதில் அளித்தால் உங்களது தகவல்களை மோசடிக்காரர்கள் திருடி பல்வேறு வகையான திருட்டுகளில் ஈடுபடுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது..