செனகல் நாட்டில் நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டு 40 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செனகல் என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கப்ரினி என்னும் நகரத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை நேரத்தில் சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்ரின் மீது ஒன்று  பயங்கரமாக மோதியது. இந்த கொடூர விபத்தில், 40 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும், 87 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு, மீட்புக்குழுவினர் உடனடியாக சென்று பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அருகே இருக்கும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். விசாரணையில் ஒரு பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததால், எதிரில் வந்த மற்றொரு பேருந்து மீது மோதியதாக தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை மோசமடைந்திருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.