இந்தியாவில் முன்பதிவு தேவை இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் திரையில் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அக்டோபர் மாதம் இறுதியில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இயக்கப்பட்டுள்ள 33 வந்தே பாரத் ரயில்களும் ஏசி பெட்டிகள் மற்றும் சொகுசு ரயிலாக உள்ளன. குறைந்த கட்டணத்தில் முன்பதிவு தேவை இல்லாத பெட்டிகளுடன் கூடிய சாதாரண வந்தே பாரத் அல்லது அந்தியோதயா வந்தே பாரத் என்ற பெயரில் ரயில்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி வந்தே பாரத் திரையில் சில மாற்றங்களை செய்து சாதாரண வந்தே பாரத் ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எட்டு முன்பதிவு தேவை இல்லாத பெட்டிகளும் , மூன்றாம் வகுப்பு ஏசி பிரிவில் 12 பெட்டிகளும் உட்பட 22 பெட்டிகள் உள்ளன. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் அக்டோபர் மாதம் இறுதியில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் வந்தே பாரத் ரயிலை ஒப்பிடும்போது இதில் கட்டணம் 40 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.