இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில்  ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் வந்தே பார்த் ரயில்கள் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிலையில் புதிய வந்தேபாரத் ரயிலுக்கு காவி நிறம் பூசப்பட்டதன் பின்னணியில் எந்தவித அரசியலும் இல்லை மாறாக அறிவியல் காரணங்களே உள்ளது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “மனித கண்களுக்கு 2 நிறங்கள்தான் நீண்ட தூரத்துக்கு அப்பால் இருந்தும் தெளிவாக புலப்படும். அவற்றில் ஒன்று மஞ்சள், இன்னொன்று காவி. ஐரோப்பிய நாடுகளில் 80 சதவீத ரயில்கள் இந்த 2 நிறங்களில் தான் இருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.