ஏற்காட்டில் பிரவீனா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது கணவர் புற்றுநோயால் இறந்துவிட்டார். இவருக்கு பிளஸ்வின்(4) என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திடீரென கொதிக்கும் என்னை பாத்திரத்தில் பிளஸ்வின் தவறி விழுந்தார். இதனால் பதறிப் போன பிரவீனா தனது குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு 50 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் நிலையில் சிகிச்சை அளிக்க 10 லட்சத்திற்கும் மேல் செலவாகும் என்று தனியார் மருத்துவமனை கூறியுள்ளது. இதனால் செய்வது அறியாமல் தவித்து வரும் பிரவீனா தமிழக அரசிடம் உதவி வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்.