இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.

4 நாட்கள் பொங்கல் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட செல்பவர்களுக்காக சிறப்பு பஸ்கள் அரசு சார்பில் இயக்கப்படுகின்றன. கடந்த மாதமே இதற்கான முன்பதிவு தொடங்கி விட்ட நிலையில், தற்போது முன்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 2 லட்சம் பேர் முன் பதிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்னும் முன்பதிவு செய்யாதவர்கள் உடனடியாக செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.