செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியா கூட்டணியில் பிரதமரை தேர்வு செய்வதில் குழப்பம் வருவதற்கான சூழ்நிலை வருவதற்கு வாய்ப்பே இல்லை. அவங்களும் தெளிவாக சொல்லிட்டாங்க. இந்த கூட்டணிக்கு இவர் தான் தலைவர் அப்படி  எல்லாம் கிடையாது. இந்த தேர்தலுக்கு இவர் தான் பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் கிடையாது. நான் என்ன கேட்கிறேன் ?  தேவகவுடா பிரைம் மினிஸ்டரா வந்தாரு. தேவகவுடா முன்னிறுத்தியா ஓட்டு கேட்டோம்.

மன்மோகன் சிங் பிரைம் மினிஸ்டரா வந்தாரு. மன்மோகன் சிங் பிரைம் மினிஸ்டராக வருவோம்னு  அவருக்கே கூட தெரிஞ்சிருக்காது. எனவே பிரதம மந்திரி என்பது ஒரு பெரிய பொருட்டே அல்ல.  ஒரு கட்சியினுடைய…. அணியினுடைய கூட்டணி தான் முக்கியமே தவிர, தேர்தலில் என்ன முன் வைக்கிறார்களோ…  அந்த கொள்கைகள் தான் முக்கியமே தவிர…  அப்படி ஒரு சூழ்நிலை வராது என்பதுதான் எங்களின் திடமான நம்பிக்கை.

3rd ஃப்ரண்ட், 4th ஃப்ரண்ட், 5th ஃப்ரண்ட் என எத்தனை ஃப்ரண்ட் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கிறது ஒரே ஃப்ரண்ட் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். ஓபிஎஸ் தனியா வரலாம்,  டிடிவி தனியா வரலாம், கமலஹாசன் தனியா வரலாம். இன்னும் பல பேர் தனியா வரலாம். அதனால  யாரையும் நீங்க ஏன் தனியா நிக்கிறீங்கன்னு நாம எப்படி கேட்க முடியும் ?

யார் வேண்டுமானாலும் தனியாக நிற்பதற்கு வரலாம். நாளைக்கு புதுசா கூட சில பேர் வருவதா சொல்லுறாங்க.  அவங்க கூட வரலாம். அதனால யாரும் வருவதையும் நாங்க தடுக்க விரும்பல. ஆனால் இன்னைக்கு மக்கள் செல்வாக்கோடு  இருக்கிற ஒரு முதல் நிலை கூட்டணி என்றால் ?  அது திமுக தலைமையில் இருக்கின்ற மதசார்பற்ற கூட்டணி தான்.  நம்பர் ஒன் ஃப்ரண்ட் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.