ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான என்.டி.ராமாராவின் பேரன் நந்தமுரி தாரகரத்னா (39) மரணமடைந்தார். ஜனவரி 27ஆம் தேதி இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அன்றுமுதல் இன்று வரை அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தொடர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி தாரகரத்னா உயிரிழந்தார். இவர் 25 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருக்கிறார்.