கள்ளக்குறிச்சியில் 35க்கும் அதிகமானவர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் அதிகமான உயிர்கள்  பலியாகியுள்ளது. இந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி வேதனையும் அடைந்தேன்.

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தால் பறிபோனதற்கு பிறகும் முதல்வராக தொடர தனக்கு தார்மீகரிமை உள்ளதா? என்பதை ஸ்டாலின் எண்ணி பார்க்க வேண்டும். மெத்தன போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகத்தனத்தை கண்டித்து வரும் ஜூன் 22 ஆம் தேதி என்று தமிழக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.