அமெரிக்காவில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டென்பரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்டிருந்த போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.

அந்த நேரத்தில் திடீரென ஒரு கண்ணுக்குத் தெரியாத பொருள் (Unidentified Object) விமானத்தின் முன்புறக் கண்ணாடியான காக்பிட் விண்ட்ஷீல்டை கடுமையாக மோதியது. சில விநாடிகளில் கண்ணாடி சேதமடைந்தது, இதனால் பைலட்டுகளும் பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விமானிகள் கட்டுப்பாட்டை மீட்டெடுத்து அவசரமாக விமானத்தை தரையிறக்கினர். அதிர்ஷ்டவசமாக, 134 பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்தனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு விமானிகளில் ஒருவருக்கு கைகள் பகுதியில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு காயமடைந்த பைலட்டின் படங்களும் காக்பிட்டில் உடைந்த கண்ணாடி, எரிந்த சுவடுகள் ஆகியவையும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

“>

 

சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படங்களில், பைலட்டின் கைகளில் இரத்தம் சிந்தியிருப்பதையும், டாஷ்போர்டு முழுவதும் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடப்பதையும் காண முடிகிறது. 2025 அக்டோபர் 16 ஆம் தேதி வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து யுனைடெட் ஏர்லைன்ஸ் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கவில்லை.

“>

 

இந்த மர்மமான மோதலுக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) தெரிவித்ததாவது, வணிக விமானங்கள் விண்வெளிக் குப்பைகளால் தாக்கப்படுவது மிகவும் அரிதானது. பொதுவாக, பறவைகள், ஆலங்கட்டி மழை போன்றவை குறைந்த உயரத்தில் விமானங்களைத் தாக்கக்கூடும்.

ஆனால் இந்த சம்பவம் 36,000 அடி உயரத்தில் நடந்தது என்பதால் இது முற்றிலும் வித்தியாசமானதாகும். தற்போது அந்த கண்ணுக்குத் தெரியாத பொருள் என்ன என்பதையும், அது வெளி விண்வெளி சிதிலமா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பதை ஆராய நிபுணர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்