தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளில் வீட்டு மின் இணைப்புகள் மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வருகிறது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் வீட்டு மின் இணைப்புகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படுவது போல வர்த்தக பிரிவின்படி மின்சார கட்டணம் வசூல் செய்யப்படும் என தகவல் பரவியது. இந்நிலையில் அந்த தகவல் முற்றிலும் தவறான தகவல் என்று தமிழ்நாடு மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீடுகளில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தினாலும் வர்த்தக பயன்பாட்டின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படாது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.