ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தில் புதிய படைப்பை உருவாக்கியுள்ளது. இது டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் உள்பட மற்ற மின்சார வாகனங்களில் இருந்து வேறுபட்டு தனித்துவமான அம்சத்தை கொண்டுள்ளது. இந்நிலையில் இ-கார்னர் அமைப்பு என்பது ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனத்தில் சோதனை கண்டுபிடிப்பு ஆகும். இந்த காரில் பக்கவாட்டாக ஓட்டுவது, 360 டிகிரி வட்டத்தில் திரும்புவது, தேவையான சக்கரங்கள் இணைப்பை மட்டும் திருப்புவது என ஏராளமான அம்சங்கள் உள்ளது.

அந்த வாகனம் ஜீரோ டர்ன் திருப்பமுறையில் செயல்படுவதால் முன் சக்கரங்கள் உள்நோக்கி சூழலும் பின் சக்கரங்கள் வெளிப்புறமாக சுழன்று 360 டிகிரி செயலற்ற திருப்பத்தை நிறைவு செய்யும். இந்த செயல்பாடு குறைந்த இயக்கத்துடன் ஒரு சிறிய இடத்தில் வாகனத்தின் திசை எளிதாக மாற்றுவதற்கு, பார்க்கிங் பிரச்சினை வராமல் தடுப்பதற்கு உதவுகிறது. இந்த கார் அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடைபெறும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.