இந்த உலகம் பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் நம்மால் உயிர் வாழ முடியாது அந்த வகையில் மரம் நமது வாழ்வில் மிகவும் இன்றி அமையாத ஒன்றாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் காடுகளை அழித்து நாம் அங்கு வீடு கட்டி குடி பெயர்கின்றோம். இந்நிலையில் மரம் என்றேனும் ஒவ்வொரு நாள் நம் உயிரை காப்பாற்றும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதற்கு எடுத்துக்காட்டாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 37 மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் சிக்கி கவிழ்ந்த போது ஒரு மரம் தான் அந்த மாணவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளது. இந்த மரத்தை பிலிப்பைன்ஸை சேர்ந்த எபிமாச்சோ அமஞ்சியோ என்பவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மரக்கன்று நட்டுள்ளார். அந்த மரம் தான் 37 மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கவிழ்ர்ந்த போது உயிரை காப்பாற்றியுள்ளது என்று அவர் மிக்க மகிழ்ச்சியிலும், பெருமையிலும் இருப்பதோடு தான் நட்ட மரத்தின் மூலம் 37 மாணவர்களை காப்பாற்றியுள்ளேன் என்று அந்த மரத்தின் முன் நின்று முதியவர் சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.